இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு ரூபாவில் ஏற்பட்ட நட்டம் காரணமாக டொலர்களைப் பெறுவதற்கு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.
இந்நிலையில் டொலர் பற்றாக்குறையினால் எதிர்காலத்தில் நாட்டிற்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதில் கூட்டுத்தாபனம் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலைமையை கருத்தில் கொண்டு எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளுக்கு நிவாரணம் வழங்குமாறு அல்லது எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நிதியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் எரிபொருள் விலையை அப்படியே பேணுவதன் மூலம் தமக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் CPC தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)