அரச புத்தகங்கள் உட்பட அச்சிடும் நடவடிக்கைகளுக்காக அரசாங்க அச்சக திணைக்களத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட அச்சு காகிதங்கள் அடங்கிய 8 கொள்கலன்கள் டொலர் இல்லாத காரணத்தினால் கொழும்பு துறைமுகத்தில் சில காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
இதனால் அரசின் அச்சுப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்சமயம் எதிர்வரும் 6 மாதங்களுக்கு போதுமான அச்சு காகிதம் மட்டுமே துறையிடம் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
திறைசேரியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும், இதுவரையில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை என அரசாங்க அச்சகம் தெரிவிக்கின்றது.
எதிர்காலத்தில் அச்சடிக்கும் காகிதம் கிடைக்காவிட்டால், அச்சடிக்கும் பணியில் பெரும் சிக்கல் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
எனவே, நிறுவன ஊழியர்கள் காகிதங்களை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)