பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக திருத்தியமைக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு கடந்த 27 ஆம் திகதி வர்த்தமானி வெளியிட்டிருந்தது. ஆனால் இது போதுமானதல்ல என்றும், இது சர்வதேசத்தின் அழுத்தங்களை தணிப்பதற்கான அரசின் முயற்சி மட்டுமே என்றும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
இன்னுமொரு வருடம், மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முந்திய இன்னுமொரு காலமாகும்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளால் ஜீஎஸ்பி பிளஸ் சலுகை அற்றுப் போகும் சூழ்நிலை ஏற்படும். இதற்கு மத்தியில் அரசாங்கம் தற்போது சர்வதேச அழுத்தத்தின் தாக்கத்தை உணர ஆரம்பித்துள்ளது.
எனவே, இதனைக் கருத்திற் கொண்டு சர்வதேச சமூகம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் முழுமையான திருத்தத்துக்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.