போலியான தொழில் தகுதிகளை முன்வைத்து, கொழும்பு லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பிரதான நிர்வாக பதவியை வகித்து வரும் மருத்துவர் குறித்து இலங்கை மருத்துவச் சபைக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
சிறுவர் நோய் தொடர்பான சிறப்பு நிபுணர் என காட்டி அந்த மருத்துவர் நிர்வாக பதவியை வகித்து வருகிறார் என முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.
போலியாக தன்னை சிறப்பு மருத்துவர் நிபுணர் என காட்டுவது மருத்துவ கட்டளைச் சட்டத்தின் கீழ் தண்டனை பெறக்கூடிய குற்றம்.
இந்த மருத்துவர் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தன்னை சிறப்பு மருத்துவ நிபுணர் எனக் கூறி ஊடகங்களில் தோன்றி வருகிறார் எனவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண மருத்துவர் ஒருவர் தன்னை சிறப்பு மருத்துவ நிபுணர் என காட்டிக்கொள்வது மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தும் எனவும் அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.