காலி - கோனபினுவல பகுதியில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அவரது கணவரால் தீ மூட்டப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கும், அவரது கணவருக்கும் இடையில் காணப்பட்ட தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, சம்பவத்தில் சிறு எரிகாயங்களுக்கு உள்ளான குறித்த பெண் உத்தியோகத்தரின் கணவரும் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.