இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு கொழும்பு நகர் உள்ளிட்ட மேல் மாகாணத்தை உள்ளடக்கும் வகையில் விசேட பாதுகாப்பு செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தகவல் வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
மேலும் தகவல் வெளியிட்ட அவர்,
''சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு காவல்துறை விசேட நடவடிக்கைக்கான செயலணி மற்றும் முப்படையினரின் ஒத்துழைப்பு பெறப்பட்டு பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
பாதுகாப்புக் கடமைகளில் 3,000இற்கும் அதிகமான காவல்துறையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
பெப்ரவரி 4 ஆம் திகதி 21 வீதிகள் போக்குவரத்திற்காக மட்டுப்படுத்தப்படும். அதற்கான செயற்றிட்டமானது மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்படும். மாற்றுப் பாதைகளை உபயோகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சுதந்திர தின விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ள விசேட அதிதிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அழைப்பிதழில் இணைக்கப்பட்டுள்ள வாகன தரிப்பிட அனுமதிகளுடன் அன்றைய தினம் காலை 7.30 மணிக்கு முன்னதாக வருகை தருமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.