கம்பஹாவில் பிரபல தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் உள்ள பெண்கள் கழிவறையில் கமரா பொருத்தப்பட்டிருந்த நிலையில், தனது மகளும் பல பெண்களும் அதற்கு சிக்கியதாக சிறுமியின் தாயார் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த கமராக்கள் பொருத்தும் பணிகள் நீண்ட காலமாக இடம்பெற்று வருவதாக சந்தேகிக்கப்படுவதால் மாணவிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கம்பஹா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் இதுவரை நீதி கிடைக்கவில்லை என அவர் கூறினார்.
இணைய நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நிலையில் அவர் இந்த விடயங்களை தெரிவித்திருந்தார். (யாழ் நியூஸ்)