எவ்வாறாயினும், இம்முறை எவ்வித ஆராதனைகளையும் நடத்துவதில்லை என்றும், சுதந்திர தின கொண்டாட்டங்களில் தான் பங்கேற்க போவதில்லை என்றும் அவர் தீர்மானித்துள்ளார்.
பேராயரின் இந்த தீர்மானத்தை அருட்தந்தை சிறில் காமினி இன்று (03) பிற்பகல் ஊடகங்களுக்கு அறிவித்தார்.
அண்மையில் பொரளை அனைத்துப் பரிசுத்தவான்களின் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்கும் வரை குறித்து கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உண்மையான குற்றவாளிகளை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தும் வரையிலும் திவ்ய ஆராதனைகளை நடத்தப்போவதில்லையென அருட்தந்தை சிறில் காமினி சுட்டிக்காட்டினார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு குறித்த தேவாலயத்தில் ஆராதனைகள் நடைபெறுவதாகவும், இவ்வாறான நெருக்கடியான மற்றும் வேதனையான சூழ்நிலையில் நீதியின்றி தன்னால் அதனைநடத்த முடியாது என பேராயர் கூறியதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, நாளை இடம்பெறவுள்ள சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதில்லையென பேராயர் தீர்மானித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.