பொரளை தேவாலய வளாகத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் மூவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த தேவாலயத்தின் நான்கு ஊழியர்களில் மூவரே இவ்வாறு கொழும்பு மேலதிக நீதிவானின் உத்தரவுக்கமைய விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சட்டமா அதிபரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தலுக்கமைய மேற்படி சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.