நாடளாவிய ரீதியில் உள்ள சதொச வர்த்தக நிலையங்களில் 998 ரூபாவுக்கான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசி, நூடுல்ஸ், தேயிலை, மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் அந்த பொதியில் உள்ளடக்கப்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனைய நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் நுகர்வோருக்கு இலாபம் உள்ளது.
சதொச வர்த்தக நிலையங்கள் இல்லாத பகுதிகளில் வசிப்பவர்கள் 1998 என்ற அவசர தொலைபேசி இலக்கங்களைத் தொடர்புகொண்டு இந்த பொதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அதற்காக 200 ரூபா போக்குவரத்து கட்டணம் அறவிடப்படும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.