உயர்தர பரீட்சையை இடைநிறுத்தம் செய்ய கோரி தாக்கல் செய்த மனுவின் தீர்ப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உயர்தர பரீட்சையை இடைநிறுத்தம் செய்ய கோரி தாக்கல் செய்த மனுவின் தீர்ப்பு!


எதிர்வரும் 07 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை கால அட்டவணையை இடைநிறுத்துவதற்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கோரிய மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

வெளிப்படைத்தன்மை முன்னணியின் செயலாளர் நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணை செய்யாமலேயே நிராகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணாவினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தீர்ப்பினை வழங்கிய நீதிபதி, மனுவில் கோரப்பட்ட நிவாரணத்தை வழங்க தமது நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.