கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படாதது குறித்து கவலையில் இருப்பதாக சிங்கள இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இம்முறை சுதந்திர தினத்தில் தான் விடுதலை செய்யப்படாதது தொடர்பில் அவர் கோபத்தில் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
தனது வாய் குறித்து வெட்கப்படுவதாகவும் கூறிய கருத்துக்களுக்காக கவலையை வெளியிட்டு, மன்னிப்பு கோர தயாராக இருப்பதாகவும் அண்மையில் தன்னை பார்க்க சென்றிருந்தவர்களிடம் ரஞ்சன் கூறியுள்ளார்.
இதனிடையே ரஞ்சன் ராமநாயக்க சிறையில் இருந்து விடுதலையானால், மீண்டும் அரசியலில் ஈடுபடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக பேசப்படுகிறது. அவர் அவுஸ்திரேலியாவுக்கு சென்று நீண்டகாலம் தங்கி இருக்க தயாராகி இருப்பதாகவும் தெரியவருகிறது.
ரஞ்சன் ராமநாயக்க தொடர்பாக இவ்வாறான செய்தி வெளியாகியுள்ள நிலையில், அவர் தரப்பில் இருந்து எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.