இன்று (07) பிற்பகல் 2.00 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றதை அடுத்து, பிரதேசவாசிகள் உடனடியாக செயல்பட்டு மண்ணைத் தோண்டி அவர்களை வெளியில் எடுக்க கடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
முதலில் இரண்டு பேரை வெளியிலெடுத்து வைத்தியசாலைக்கு அனுப்பிய நிலையில் மேலும் கடுமையான போராட்டத்திதன் சுமார் ஒரு மணித்தியாலத்தில் மேலும் இருவரை வெளியில் எடுத்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
பிந்திக் கிடைத்த உத்தியோகபூர்வமற்ற தகவல்களின்படி இருவர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. (இன்னும் உறுதி செய்யப்படவில்லை)
தினக்கூலி வேலைகளுக்கு வரும் சிலரே இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
-மடவளை நியூஸ்
Update: மூவர் பலியாகியுள்ள நிலையில், ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.