சண்முகா இந்து மகளிர் கல்லூரி முஸ்லிம் ஆசிரியை விவகாரம் பின்னணியில் நிற்கும் பூதம் யார்??

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சண்முகா இந்து மகளிர் கல்லூரி முஸ்லிம் ஆசிரியை விவகாரம் பின்னணியில் நிற்கும் பூதம் யார்??


சில காலங்களுக்கு முதல் சண்முகா இந்து தமிழ் மாக கல்லூரியில் ஏற்பட்ட அபாயா ஹிஜாப் பிரச்சினை ஒரு பூதாகரமான பிரச்சனையாக மாறி, பொலீஸ், மனித உரிமைய ஆணைக்குழு, நீதிமன்றம் என சட்டத்தின் சந்து பொந்துகள் அனைத்திலும் சென்றடைந்தது.

இதற்கு மத்தியில் அண்மையில் ஏற்பட்ட சுமூக நிலையிலான உடன்பாட்டின் அடிப்படையில் இவ்வாசிரியை அங்கே சேவை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதன் பிறகு கல்லூரிக்கு கடமைக்காகச் சென்ற ஆசிரியை, ஒரு திட்டமிட்ட அடிப்படையில் பல நூற்றுக் கணக்கானவர்கள் அங்கு கூடி, அவரின் கடமைக்கு இடையூறு விளைவித்து, கடமையை செய்ய விடாது தாக்கப்பட்டார்.

இலங்கையின் தண்டனை சட்டக் கோவையின் பிரகாரம் ஒரு அரச  அதிகாரியின் சேவையின் போது அவரை தாக்குவது, அவரின் சேவைக்கு இடையூறாக இருந்து அவரது கடமையை நிறைவேற்ற விடாமல் தடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்நிலையில் இவ்வளவு பாரதூரமான விளைவுகள் நடந்தும், இது சம்பந்தமான காணொளிகள் வெளியாகியும், எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுத்ததாக தெரியவில்லை.

மேலும் ஒரு அரச அதிகாரியின் சேவை நேர பகுதியில் அவரின் சேவைக்கு இடையூறு விளைவித்ததாக இவரும் கைது செய்யப்படவும் இல்லை.

குறித்த ஆசிரியையின் விடயம் சுமுகமான முறையில் பேசி முடிக்கப்பட்டு, அதன் பிறகு அதற்கு மாறாக குறித்த பாடசாலை இனுஉள் அனுமதியின்றி பலாத்காரமாக உட்புகுந்து, கலகம் விளைவித்து,  திட்டமிட்டு ஆசிரியையை தாக்கியவர்கள் கைது செய்யப்படாதது ஏன்? இதன் பின்னணியில் பிணைந்துள்ள நாடகம் என்ன?

இலங்கை தண்டனை சட்டக் கோவையின் பிரகாரம் குற்றம் செய்தவர்களை தேடிக்கண்டு பிடிக்க பாதுகாப்புத் தரப்பு  தன்  கடமையை செய்யாதிருக்கும் அளவுக்கு இந்த நாடகத்தின் பின்னால் உள்ள பூதம் யார்?

-பேருவளை ஹில்மி

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.