கோவிட் வைரஸ் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் முடிவுக்கு வந்துவிடும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
உலக மக்கள் தொகையில் 70 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுமாயின் வெகு சீக்கிரத்தில் கோவிட் தொற்று முடிவுக்கு வந்துவிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்றையதினம் (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இதனை நாம் நிச்சயமாக நிறைவேற்றுவோமாயின், தீவிரமான கட்டம் உண்மையில் முடிவுக்கு வந்துவிடும், அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது எமது கைகளிலேயே உள்ளது. இது வாய்ப்புக்கான விடயம் அல்ல.
இது தேர்வுக்கான விடயம் என்றார். 70 சதவீதமானோக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்பட வேண்டும் என்ற இலக்கை, ஜூன் அல்லது ஜூலைக்குள் அடைய எதிர்பார்ப்பதாகவும், அவ்வாறு நிகழுமாயின் கோவிட் தொற்றின் தீவிர தாக்கத்தை நிச்சயமாக முடிவுக்கு கொண்டுவர முடியும் எனவும் அவர் கூறினார்.