2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தால் இன்று மின்சார நெருக்கடி ஏற்பட்டிருக்காது என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தவறான முடிவின் விளைவே இன்று மின் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டுக்கு பின்னரான நல்லாட்சி அரசாங்கம் எடுத்த தீர்மானங்களினால் தற்போதைய அரசாங்கம் மீது குற்றம் சுமத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெண்கள் சம்மேளனத்தை ஸ்தாபிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)