மஹரகம பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
முதல் லேன் - ரயில்வே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நாடளாவிய ரீதியில் நடைபெறும் இசைக் கச்சேரிகளில் பங்கேற்கும் பிரபல நடனக் குழுவொன்றின் தொழில்முறை நடனக் கலைஞராக இவர் பணியாற்றிவந்துள்ளார்.
26 வயதான குறித்த யுவதி குருநாகல் - அம்பகஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.
நிக்கவெரட்டிய பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவருடன் குறித்த யுவதிக்கு தொடர்பு இருந்துள்ளதாகவும், அது தொடர்பான பிரச்சினை காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்களை பதிவு செய்வதற்காக குறித்த வர்த்தகர் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக மஹரகம காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.