மொனராகலை தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாரிஅராவ பல்லேவெலபெத்த பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் நேற்று (14) தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவனின் தற்கொலைக்கு காதல் விவகாரமே காரணம் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 12ஆம் ஆண்டு கல்வி கற்கும் கே.ஜி. அகில டில்ஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பகல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.