23 வயதான அவிந்த ரந்தில ஜெஹான் பெர்னாண்டோ என்ற சந்தேக நபர் நேற்று (02) இரவு சட்டத்தரணி ஊடாக சரணடைந்த பின்னர் ராகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட BMW கார் களுபோவில பகுதியில் வைத்து ராகம பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, சம்பவம் தொடர்பில் மொத்தம் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அடையாள அணிவகுப்பிற்காக வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
ராகம மருத்துவ பீட மாணவர்கள் நேற்று காலை தாக்கப்பட்டதோடு, சம்பவத்தில் காயமடைந்த நான்கு மாணவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.