கத்தாரில் நடைபெற்று வரும் அரேபியன் குதிரை கண்காட்சி விழாவில் இலங்கையின் இரக்காமத்தை சேர்ந்த தற்போது கட்டார் நாட்டில் வசித்து வரும் ஓவியக் கலைஞர் நஸார் சர்பான் அவர்களின் குதிரை ஓவியம் காட்சிப்படுத்தப்படுள்ளது.
முதல் தடவையாக இலங்கை இளைஞனின் ஓவியமொன்று இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்ட நிகழ்வு இதுவாகும்.
2022 பிப்ரவரி 12 வரை நடைபெறுகின்ற இக் கண்காட்சியில் அமெரிக்கா உட்பட 11 நாடுகள் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் பங்கேற்கின்றன.
இவ்விழாவில் அரேபிய குதிரைகள் பற்றிய பல்வேறு படைப்புகள், ஓவியங்கள், புகைப்படங்கள் மற்றும் குதிரை சாடில்ஸ் (Saddles) வரைதல் போன்றவை இடம்பெற்றுள்ளது.