இந்த சம்பவம் கடந்த 09ஆம் திகதி இரவு 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வியாபார உரிமையாளரை “வெளியே வாருங்கள்” என்று கூறி அதன் பின் அவரை மடக்கி பிடித்து லொறியில் ஏற்றிச் சென்றுள்ளார்.
பின்பு அவரின் கழுத்தில் கத்தியை வைத்து, “உன்னை கொல்வதற்கு எங்களுக்கு 5 இலட்சம் ரூபாய் தருவதாக ஒருவர் கூறியுள்ளார். அதனால் தான் நாங்கள் உன்னை கடத்தியுள்ளோம். உன்னை நாங்கள் விடுவிக்க வேண்டும் என்றால் எமக்கு நீ தற்போது 3 இலட்சம் ரூபாய் பணம் தாருங்கள் நாங்கள் விடுவிக்கிறோம்” என்று கடத்தல்காரர்கள் வியாபார நிலைய உரிமையாளருக்கு தெரிவித்துள்ளனர்.
இவர்களிடம் இருந்து தப்பிப்பதற்கு “நான் உங்களுக்கு 3 இலட்சம் பணம் தருகிறேன்” என்று கூறி வங்கி ஒன்றுக்கு அழைத்துச் செல்லுங்கள் எ.டி.எம் மூலமாக எடுத்து தருகிறேன் என்று கூறிய பின்பு லொறியில் கலஹா நகரில் இருக்கும் வங்கிக்கு பயணித்துள்ளனர்.
இரவு நேர வாகனங்கள் பரிசோதிக்கும் கலஹா பொலிஸார் கலஹா வங்கிக்கு முன்னால் திடீரெனq இந்த லொறியை சமிஞ்சை காட்டி நிறுத்தியுள்ளனர்.
ஆனால் லொறியை நிறுத்தாமல் பயணித்துள்ளனர். கலஹா பெல்லூட் வழியாக தலாத்ஒயா பிரதேசத்திற்க்கு செல்லும் போது திடீரென லொறியின் எஞ்சின் கோளாறு காரணமாக லொறி இடை நடுவே நின்றுள்ளது.
அதன் பிறகு கடத்தல் காரர் ஒருவர் கீழே இறங்கி லொறியின் கோளாறு பழுது பார்க்கும் போது வியாபார நிலைய உரிமையாளர் தப்பித்து ஒடி, கலஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அதன் பிறகு கலஹா பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார்.
இந்த முறைப்பாட்டுக்கு அமைய கலஹா பொலிஸார் உடனடியாக தேடும் பணியில் ஈடுப்பட்டனர்.
இதையடுத்து தெல்தோட்டை பகுதியில் வீடு ஒன்றில் தலைமறைவாக இருந்த இரண்டு சந்தேக நபர்களை கலஹா பொலிஸா கைது செய்தனர்.
33 மற்றும் 26 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களும் தெல்தோட்டை வீசந்திரமலை பிரதேசத்தை கொண்டவர்கள். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.