வைத்தியராக தன்னை அடையாளப்படுத்தி ஹட்டன் கொட்டகலை கொமர்ஷல் பிரதேசத்தில் இளைஞர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய தலவாக்கலை விசேட அதிரடிப் படையினரால் இன்று பிற்பகல் குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் ஹட்டன் கொட்டகலை கொமர்ஷல் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் வைத்தியராக தன்னை அடையாளப்படுத்தி நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் இளைஞர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்துள்ளார்.
இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து 338 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், போதை மாத்திரைகளை வாங்க வந்திருந்த இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் ஹட்டன் கொட்டகலை பிரதேசத்தில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றில் பணி புரிந்தவர் என தெரிவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹட்டன் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக திம்புள்ளை பதன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.