கம்பஹா கலகெடிஹேன பிரதேசத்தில் தமது கட்சியின் பொதுக்கூட்டம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் அரசாங்கத்தின் செயல் மாத்திரமே என மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு தெரிந்தே நிஸ்ஸங்க சேனாதிபதியால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதுவே தமது கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவை கொலை செய்யும் முயற்சியின் ஆரம்ப கட்டம் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நிஸ்ஸங்கவின் தனிப்பட்ட மெய்ப்பாதுகாவலர்களே இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.
இணைய சேனல் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
மேலும் அடுத்துவரும் தேர்தலில் 75 வீதம் வாக்குகளை பெற்று அநுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் ஜே.வி.பி அரசாங்கத்தை அமைக்கும் என்றும் அவர் கூறினார். (யாழ் நியூஸ்)