எதிர்காலத்தில் வெளிநாட்டில் பணிபுரிந்து சம்பாதிக்கும் பணத்திற்கும் அதே சந்தை மதிப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குருநாகல் பிரதேச சபை கட்டிடம் இன்று (02) அமைச்சர்களான ஜனக பண்டார தென்னகோன் மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரின் பங்களிப்புடன் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
"வெளிநாட்டு வேலைகளில் இருந்து நாட்டிற்கு பணம் அனுப்பும் பணத்தை கருப்பு சந்தையில் அல்லாமல் சட்டப்பூர்வமாக அனுப்புங்கள், எதிர்காலத்தில் அவர்களுக்கு அதே சந்தை மதிப்பு வழங்கப்படும்.
கடன் எடுக்கும் பொது ஏச்சு பேச்சு கேட்பது வளமை, ஆனால் கடனை திருப்பி செலுத்தும் போது திட்டுவாங்கும் நிதியமைச்சரை உங்களுக்கு தெரியுமா?
கடனுக்காக நாங்கள் குற்றம் சாட்டப்படுகிறோம். நாங்கள் 500 மில்லியன் டொலர்கள் கடன்பட்டுள்ளோம். இந்தளவு கடனை யார் வாங்கினார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
இந்த ஆண்டு மட்டும் 6.9 பில்லியன் டொலர்கள் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. இந்த ஆண்டு செலுத்த வேண்டிய அனைத்து கடன்களையும் நாங்கள் திருப்பிச் செலுத்துவோம். அதை நாங்கள் பொறுப்புடன் கூறுகிறோம்.
எதிர்க்கட்சி இந்த தலைமுறை இருக்கும் வரை மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது, ஆனால் ஆட்சிக்கு வந்ததும் கடன் இல்லாத நாட்டை இன்னொரு தலைமுறையிடம் ஒப்படைப்பது ஜனாதிபதியின் உறுதியானது.
இந்த மகா பருவத்தில் குருநாகலில் சிறந்த அறுவடை கிடைத்துள்ளது. ஆனால் அந்த விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதே ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பரிந்துரையாகும்.
அனைத்து நெல் விவசாயிகளுக்கும் பயிர் செய்ததை கௌரவமாக நஷ்ட ஈடு வழங்குங்கள். முதலில் குருநாகல் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்குங்கள்.
கிராமத்துடன் பேசுவோம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வேலைத் திட்டம் நாளை தொடங்கப்படும். இதற்காக ஒரு லட்சம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கும் 3 மில்லியன் ரூபா மற்றும் பிரதேசத்திலுள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் 4 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார். (யாழ் நியூஸ்)