28 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு வழங்கல், நாளை (14) முதல் ஆரம்பிக்கப்படுவதாக விடயத்துடன் தொடர்புடைய இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தற்போதுவரையில் 3,500 ரூபாவைப் பெற்ற சமுர்த்தி பயனாளர் குடும்பம் ஒன்றுக்கு, 4,500 ரூபா கொடுப்பனவு கிடைக்கப்பெறும்.
2,500 ரூபா கொடுப்பனவைப் பெற்ற குடும்பத்துக்கு 3,200 ரூபா கொடுப்பனவும், 1,500 ரூபா கொடுப்பனவைப் பெற்ற குடும்பத்துக்கு 1,900 ரூபா கொடுப்பனவும் கிடைக்கும்.
இதற்கமைய, எந்தவொரு சமுர்த்தி பயனாளியும், சமுர்த்தி வங்கி மூலம், நாளைமுதல் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.