வெலிவேரிய, கடவத்தை, கம்பஹா மற்றும் நிட்டம்புவ ஆகிய பகுதிகளில் இருந்து கொழும்பு நோக்கி வரும் பல பேருந்துகள் இன்று (01) பேலியகொட மானிங் சந்தைக்கு அருகில் இருந்து சேவையில் ஈடுபட ஆரம்பித்தன.
இதனை பார்வையிடுவதற்காக பஸ்ஸில் ஏறிய இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவாவுக்கு பஸ் பயணிகளால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தமது பஸ் வண்டி தாமதமாவதாக பயணிகளால் கடும் விசனம் வெளிக்காட்டப்பட்ட நிலையில் அமைச்சர் விரைவாக பஸ்ஸிலிருந்து இறங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். (யாழ் நியூஸ்)