கொழும்பு பிரதான மேல்நீதிமன்ற நீதிபதி தமித் தொடவத்த முன்னிலையில் குறித்த வழக்கு இன்று (01) அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வழக்கில் பிரதிவாதிகள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, தமது கட்சிகாரர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியாமையால், சாட்சியாளர்களை அழைக்காது அவர்களை விடுக்குமாறு கோரியிருந்தார்.
2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 2 கோடியே 94 லட்சம் ரூபா செலவில் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளரான மஹிந்த ராஜபக்ஷவின் படம் பொறிக்கப்பட்ட 50 லட்சம் நாட்காட்டிகள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டமை தொடர்பில் சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.