சந்தேக நபர்கள் இன்று வத்தளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராகம மருத்து பீட மாணவர் விடுதி வளாகத்திற்குள் நுழைந்த இனந்தெரியாத குழுவினரால் கடந்த முதலாம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அப்பீடத்தின் 4 மாணவர்கள் காயமடைந்தனர்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ராகம காவல்துறையினர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் மகன் மற்றும் மருத்துவ பீட மாணவர்கள் என 9 பேரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.
இதனையடுத்து. சந்தேக நபர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்க வத்தளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.