கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற 69 இலட்சம் ஆணை அடுத்த தேர்தலில் 79 இலட்சமாக அதிகரிக்கும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
அதேநேரம் அடுத்த ஆண்டு பெப்ரவரிக்கு முன்னர் நிச்சயமாக தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எம்பிலிப்பிட்டியவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஊழியர் சேமலாப நிதியத்தின் வரி வரைவில் பாதகமான முன்மொழிவுகள் இருப்பின் அதனை திருத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக இதன்போது அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)