ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 64 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 64 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு!


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சக்ரானின் பயிற்சி முகாமில் பயிற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பைப் பேணிவந்த 60 பேரையும் எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் காணொளி மூலமாக நேற்று (02) உத்தரவிட்டுள்ளார்.


கடந்த 21.4.2019 ஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சக்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்குப் பயிற்சிக்காகச் சென்றார்கள் என்ற சந்தேகத்தின் காத்தான்குடியை சேர்ந்த 65 பேரைக் கைது செய்தனர்.


அதேவேளை சக்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், உட்பட 04 பேரை மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்தனர் இரு வெவ்வேறு வழக்குகளைக் கொண்ட 69 பேர் பேர் தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.


இவர்களில் 05 பேர் வழக்கிலிருந்து விடுவித்து விடுவிக்கப்பட்டதையடுத்து 64 பேர் தொடர்ந்து பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த வெவ்வேறு இரு வழக்குகளைக் கொண்ட 64 பேரும் நாட்டிலுள்ள பொலன்னறுவை, அனுதாரபுரம், கேகாலை, திருகோணமலை, போன்ற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.


இந்நிலையில் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் முன்னிலையில் இந்த வழக்குகள் வழுக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது தற்போது தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் காரணமாக நீதிமன்றிற்கு இவர்களை அழைத்துவர முடியாததையடுத்து அவர்களைக் காணொளி மூலமாக எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் உத்தரவிட்டார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.