எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்கான 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தம் இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி (எக்ஸிம்- EXIM) மற்றும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் இன்று (02) கைச்சாத்தானது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில்திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும், இந்திய தரப்பில் இருந்து எக்ஸிம் வங்கியின் தலைமை பொது முகாமையாளர் கௌரவ் பண்டாரியும் கையெழுத்திட்டனர்.