ராகம பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் இருந்து சில பொருட்களை திருடிய நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த நபர் பல்பொருள் அங்காடிக்கு சென்று சிறுவர்களுக்கு பயன்படுத்தப்படும் கொலோனை பணம் செலுத்தாமல் எடுத்துச் சென்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அங்கிருந்து வெளியேறும் போது, அருகில் இருந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை எதிர்க்க முற்பட்டபோது கத்தியால் தாக்கியுள்ளார்.
சம்பவத்தை நேரில் பார்த்த மற்றுமொரு குழுவினர் சந்தேக நபரை துரத்திச் சென்றுள்ளனர்.
அதன்பிறகு, யாரேனும் தன்னை அணுகினால் கழுத்தை அறுத்துவிடுவேன் என்று மிரட்டிய அந்த நபர், கையில் வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக ராகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி ராகம வைத்தியசாலையின் விபத்துப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். (யாழ் நியூஸ்)