கத்தாரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் இலங்கையர் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைவதற்கு கத்தார் நாட்டு இளைஞர் ஒருவரிடம் அடையாள அட்டையை கோரியமை தொடர்பில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தையடுத்து சம்பவ இடத்திற்கு திரும்பிய இளைஞர் அங்கிருந்த இரு பாதுகாப்பு அதிகாரிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
அதில் ஒருவர் மரணித்த நிலையில் ஒருவர் படுகாயமடைந்திருந்தார் என முன்னைய செய்தியில் குறிப்பிட்டிருந்தோம். இறந்தவர் இலங்கையர் என்பது பின்னர் தெரியவந்தது. இருந்தபோதிலும் அவரின் தனிப்பட்ட விபரங்கள் ஏதும் இன்னும் வெளிவரவில்லை.
துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். (யாழ் நியூஸ்)
முன்னைய செய்தி: https://bit.ly/32Bl7TC