இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக தமது அமைச்சுக்கு நேரடியாக நிதி வழங்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை நம்பி இருக்காமல் தேவையான எரிபொருளை கொள்வனவு செய்யுமாறு இலங்கை மின்சார சபை இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை வழங்குவதற்கு டொலர்களை வழங்குமாறு இலங்கை மின்சார சபையிடம் கோரியுள்ளது.
இலங்கைக்கான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக இந்தியா வழங்கிய 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனில் ஒரு பகுதியை தமது அமைச்சுக்கு வழங்குமாறும் அமைச்சர் காமினி லொக்குகே கோரிக்கை விடுத்துள்ளார்.
மின்வெட்டு இல்லாமல் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மாதம் 30 மில்லியன் டாலர் எரிபொருள் தேவைப்படுகிறது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)