மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இன்று முதல் நாட்டின் பல பகுதிகளில் இரண்டரை மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
எதிர்காலத்தில் எரிபொருள் இல்லாத பட்சத்தில் ஏனைய அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் சபை மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)