கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் இன்று (30) காலை தப்போவ சரணாலயத்தில் போட்டிக்காக புறாக்களை விடுவிக்க முற்பட்ட இருவரை கைது செய்துள்ளனர்.
கண்டி - அக்குறணை பிரதேசத்தில் இருந்து 359 புறாக்களையும் அவற்றை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட லாரி ஒன்றையும் வனவிலங்கு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
வனவிலங்கு பணிப்பாளரின் அனுமதியின்றி விலங்குகள் அல்லது தாவரங்களை தேசிய காப்பகம் அல்லது சரணாலயத்திற்கு விடுவிப்பது அனுமதிக்கப்படாது.
இன்று பிற்பகல் கருவலகஸ்வெவ கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வைத்துக் கைப்பற்றப்பட்ட புறாக்களை விடுவிக்க வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.