பாகிஸ்தானில் கொல்லப்பட்ட இலங்கை முகாமையாளர் பிரியந்த குமாரவின் விதவையான மனைவிக்கு 100,000 அமெரிக்க டொலர் நிதியும் அவர் பணிபுரிந்த ராஜ்கோ இண்டஸ்ட்ரீஸ் எனும் நிறுவனம் மூலம் முதல் சம்பள தொகையான 1667 அமெரிக்க டொலரும் அவரது வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கட்சியின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கின் மூலம் இன்று அறிவித்துள்ளது.
மேலும் எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு பிரியந்த குமாரவின் சம்பளத்தொகை அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)
Funds of 100000 US $ and first salary of 1667 US Dollar committed by Rajco Industries for next 10 years and announced by Prime Minister @ImranKhanPTI has been transferred to the account of Widow of deceased Sri Lankan Manager Mr Priyantha Kumara in Sri Lanka pic.twitter.com/ImZ8URPiHd
— PTI (@PTIofficial) January 17, 2022