பொரளை அனைத்து புனிதர்களின் கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட சம்பவத்திற்கு அரசாங்கமும் பொலிஸாரும் ஏனைய தரப்பினரை குற்றம் சாட்டி தப்பிச் செல்ல இடமளிக்கப்பட மாட்டாது என பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தின் உண்மை நிலை கண்டறியப்படும் வரை போராட்டம் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தினால் அநீதி இழைக்கப்பட்ட முனி உள்ளிட்டோருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வழங்கப்படும் என பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)