எமிரேட்ஸ் விமான சேவை இலங்கையர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எமிரேட்ஸ் விமான சேவை இலங்கையர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

இந்த ஆண்டு இலங்கைக்கு மேலும் ஐந்து விமான சேவைகளை சேர்க்கவுள்ளதாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

புதிய விமான சேவையானது எதிர்வரும் 2022 பெப்ரவரி 10 முதல் செயல்படத் தொடங்கும் என்று விமான நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது.

இந்த மேலதிக விமானங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொழும்பிற்கு 26 வாராந்திர விமானங்களை வழங்குவதற்கு எமிரேட்ஸ் உதவுகின்றது. மாலைத்தீவில் (மாலே) இருந்து கொழும்புக்கான தினசரி சேவையும் இதில் அடங்கும்.

விமானத்தின் நிறுவனத்தின் அறிக்கையின் படி, சேர்க்கப்பட்ட விமானங்கள் ஒவ்வொரு செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும்.

எமிரேட்ஸ் விமானம் EK654 துபாயில் இருந்து 1035 மணிக்கு புறப்பட்டு உள்ளூர் நேரப்படி 1625 மணிக்கு கொழும்பை வந்தடையும்.

திரும்பும் விமானம் EK655 கொழும்பிலிருந்து 2205 மணிக்குப் புறப்பட்டு, உள்ளூர் நேரப்படி மறுநாள் 0155 மணிக்கு துபாய் சென்றடையும்.

மேலதிக விமானங்களினால் வாரத்திற்கு மேலும் 1,780 ஆசனங்களை அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், Emirates SkyCargo துபாய் மற்றும் கொழும்பு இடையே வாரத்திற்கு ஒவ்வொரு வழியிலும் 100 டன் சரக்கு திறனை மேலதிகமாக வழங்கும். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.