சுன்னாகம் சந்தியில் உள்ள மதுபானசாலைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களை மூவர் திருடிச் சென்றதுடன், திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்கள் கும்பலை துரத்திச் சென்றுள்ளனர்.
மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச் சென்ற நிலையில், எதிரே வந்த டிப்பர் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் உயிரிழந்துள்ளார்.
பின்னர் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஏனைய இருவரையும் பிரதேசவாசிகள் மடக்கிப் பிடித்து சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ராசா ரவிச்சந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இரு சந்தேகநபர்கள் தெல்லிப்பழையைச் சேர்ந்தவர்கள்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)