பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எதுவும் திருடப்படவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இணையத்தளங்கள் இவ்வாறான சம்பவங்களை தெரிவிப்பதாகவும், அவற்றுக்கு பதிலளிக்க அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இணையதளங்களிலும் இதுபோன்ற திருட்டு நடந்துள்ளதாக குறிப்பிட்டு வருவதாகவும், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ள இணையதளங்களுக்கு பதில் அளித்தால், தினமும் அது தொடர்ந்து நடக்கும் என்றும் அவர் கூறினார்.
வைபவம் ஒன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)