அமைச்சர் பந்துலவிடம் இருந்து தேங்காய் நிவாரணம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமைச்சர் பந்துலவிடம் இருந்து தேங்காய் நிவாரணம்!

 


சதொச விற்பனை நிலைய வலையமைப்பினூடாக இவ்வருடம் முழுவதும் 75 ரூபா என்ற நிர்ணய விலையில் தேங்காய்களை நுகர்வோர் பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.


நாட்டில் தேங்காய் விலை அதிகரித்துள்ள நிலையில் நுகர்வோருக்கு குறைந்த விலையில் தேங்காய் வழங்குவதற்கு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு மற்றும் தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் என்பன வர்த்தக அமைச்சு மற்றும் லங்கா சதொச விற்பனை நிலைய வலையமைப்புடன் உடன்படிக்கையொன்றை மேற்கொண்டுள்ளன.


இதன்படி, முதற்கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.