நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது தொடர்பான கலந்துரையாடல்களை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
லண்டனிலுள்ள பைனான்சியல் டைம்ஸ் சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டியிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் அவர் இந்த நேர்காணலை வழங்கியுள்ளார்.
6.9 பில்லியன் டொலர் கடனை இவ்வருடம் செலுத்துவது இலங்கைக்கு மிகவும் கடினமானது எனவும், மருந்துகள், எரிபொருள் உட்பட அனைத்துக்கும் நிதியைத் திரட்ட வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.