காதல் தொடர்பு தொடர்பாக ஏற்பட்ட தகராறு முற்றியதில் நேற்று அதிகாலை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடவத்தை ஆன்ட்ரூ ஒழுங்கை பிரதேசத்தில் நடந்துள்ளது.
பிரதேசத்தில் உள்ள வாடகை வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளதுடன் கண்ணாடி துண்டால் நபர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 20 வயதான நபர் எனவும் அவர் கடவத்தை கோணஹேன பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். சடலம் ராகமை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கொலை சம்பவம் தொடர்பாக கடவத்தை கண்டி வீதி இலக்கம் 19 என்ற விலாசத்தில் வசிக்கும் 19 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கொலைக்கு பயன்படுத்திய கண்ணடி துண்டை தாம் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் குறித்து கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.