பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் தரையிறங்கும் கியரில் மறைந்திருந்து, இந்தியாவின் பஞ்சாப்பைச் சேர்ந்த பிரதீப் சைனி (23 வயது) மற்றும் விஜய் சைனி (19 வயது) ஆகிய இரு சகோதரர்கள் இந்தியாவில் இருந்து லண்டனை நோக்கி புறப்பட்டனர்.
டெல்லியில் இருந்து லண்டனுக்கு சுமார் 67 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் உள்ளது.
சமீபத்தில் ஆப்கானிஸ்தானின் நெஞ்சை பதற வைக்கும் வீடியோவை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த வீடியோவில், தலிபான்களிடம் இருந்து தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக அமெரிக்க விமானப்படையின் விமானத்தில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பலர் இருந்தனர். இடம் பற்றாக்குறை காரணமாக விமானி அறை மற்றும் கதவு உதவியுடன் விமானத்திற்கு வெளியே பலர் நின்றுக்கொண்டும் தொங்கிக்கொண்டும் பயணம் செய்ய முற்பட்டனர். மேலும் விமானம் ஓடும் போது விமானத்தில் இருந்து விழுந்து பலர் உயிரிழந்த சோகம் நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும்.
இதுபோன்ற ஒரு சம்பவம் நிஜத்தில் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. 1996 ஆம் ஆண்டு இந்தியர் ஒருவர் டெல்லியில் இருந்து லண்டன் நோக்கி பயணிக்கும் விமானம் ஒன்றிற்கு வெளியே அமர்ந்துகொண்டு லண்டனை சென்றடைந்துள்ளார். இதனை உலகம் முழுவதும் அறிந்ததும், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் 1996 ஆம் ஆண்டு, இந்தியாவின் பஞ்சாப்பைச் சேர்ந்த பிரதீப் சைனி (23 வயது) மற்றும் விஜய் சைனி (19 வயது) ஆகிய இரு சகோதரர்கள் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் தரையிறங்கும் கியரில் இருந்தபடி இந்தியாவில் இருந்து லண்டன் சென்றடைந்துள்ளனர்.
இந்த இரு சகோதரர்களின் கதை உலகையே உலுக்கியது.
உண்மையில், இந்த இரண்டு சகோதரர்களும் தமது வறுமையை போக்க வேண்டும் என முடிவு செய்து லண்டன் செல்ல விரும்பினர். இருவரிடமும் விசாவோ விமான டிக்கெட் பெற அதிகப் பணமோ இருக்கவில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், விமானத்தில் வெளியில் இருந்தபடி இலவசமாக பயணிக்க முடிவு செய்துள்ளனர். பின்னர் சகோதரர்கள் இருவரும் பஞ்சாபிலிருந்து டெல்லிக்கு வந்தனர்.
இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு சென்று வாய்ப்பு கிடைத்தவுடன் விமான நிலையத்திற்குள் நுழைந்து மக்களிடமிருந்து மறைந்து விமானத்தின் சக்கரத்தின் அருகே தரையிறங்கும் கியரில் அமர்ந்துகொண்டனர்.
இருவரும் லண்டனுக்குப் போக வேண்டும் என்ற ஆவலில் இருந்ததால் தங்கள் உயிரைப் பற்றிக் கூட கவலைப்படவில்லை.
40 ஆயிரம் அடி உயரத்தில் -60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை; லண்டனில் இருந்து டெல்லிக்கு சுமார் 67,000 கிமீ தூரம்; மேலும் 10 மணி நேரம் பயணம்.
இப்படிப்பட்ட சூழ்நிலையிலேயே இந்த இரண்டு சகோதரர்களும் தரையிறங்கும் கியரில் ஒளிந்துகொண்டு லண்டன் செல்ல முடிவு செய்தனர்.
பின்னர் குறித்த விமானம் லண்டனை அடைந்தபோது, குளிர் மற்றும் இன்ஜின் சத்தத்தின் காரணமாக பிரதீப் சைனிக்கு சுயநினைவு இருக்கவில்லை.
துரதிர்ஷ்டவசமாக அவரது தம்பி விஜய் சைனி விமானத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்திருந்தார்.
பின்னர், பிரதீப்பின் உடல்நிலை மோசமடைந்ததால், லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சுயநினைவுக்கு வந்த பிறகு பிரதீப் தன் கதையை அதிகாரிகளிடம் எடுத்துரைத்தார், அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
பிரதீப் இங்கிலாந்தில் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக 18 ஆண்டுகள் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது. இறுதியில் பிரதீப் விடுதலை செய்யப்பட்டார். இப்போது அவர் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்று லண்டன் விமான நிலையத்தில் சாரதியாக பணிபுரிகிறார்.
ஆக்கம் - யாழ் நியூஸ்