கொழும்பு, ஆர்மர் தெரு பகுதியில் அமைந்துள்ள கோயிலின் வருடாந்த உற்சவத்தின் போது இடம்பெற்ற தீமிதித்தல் நிகழ்வில் கலந்து கொண்ட 26 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தின் போது பிள்ளையின் தாய் ஒருவர் காலில் தீக்காயம் அடைந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் கெசல்வத்த பிரதேசத்தை வசிப்பிடமாகவும், 10 வயது சிறுமியின் தாய் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (14) கோயிலின் தீபத்திருவிழா இடம்பெற்றதாக தெரிவித்த பொலிஸார், பாதங்கள் எரிந்த நிலையில் வைத்திய உதவியை நாடாத காரணத்தினால் சுகவீனமடைந்து பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளத் தவறியதாகவும், செவ்வாய்க்கிழமை (18) தனது வீட்டில் இருந்த போது திடீரென சுகவீனமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
எனினும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)