நாட்டில் விற்பனை செய்யப்படும் டீசல் லீற்றர் ஒன்றினால் ரூ. 30 நட்டம் ஏற்படுவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 89 டொலர்களாக உயர்ந்துள்ளது, இது ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவு என்று அமைச்சர் கூறினார்.
இலங்கையின் மாதாந்த ஏற்றுமதி வருமானத்தில் மூன்றில் இரண்டு பங்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை மாதம் 500 மில்லியன் டொலர்களை செலவிடுகிறது.
இதன்படி, நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொண்டு ஒட்டுமொத்த மக்களும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றார்.
எவ்வாறாயினும், எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பெப்ரவதி குளிர்காலம் தொடங்கும் நிலையில், குளிர் நாடுகளில் எரிபொருள் தேவை அதிகரித்து வருவதால் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டொலர்களை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
டொலர் நெருக்கடி காரணமாக இலங்கையும் கடுமையாகப் பாதிக்கப்படுவதுடன், எரிபொருள் விலை அதிகரிக்கப்படாவிட்டால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கணக்கிட முடியாத நட்டத்தை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)