டெங்கு நுளம்பு பெருகும் இடங்களைக் கண்டறியும் விசேட ஆளில்லா விமானம் (ட்ரோன்) ஹொரணையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆளுநரின் செயற்பாட்டு அறை மற்றும் விமானப்படையினர் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
ஹொரணை வைத்திய அதிகாரி அலுவலகம், ஹொரண பொலிஸ் மற்றும் ஹொரணை மாநகர சபையும் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
ட்ரோன் கேமரா மூலம் நகரின் உயரமான பகுதிகளில் கட்டிடங்கள் உள்ளிட்ட பல டெங்கு பரவும் இடங்களை கண்டறிய முடிந்ததாக கூறப்படுகிறது.
இதன்படி பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் அந்த வளாகங்களில் உள்ள மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். (யாழ் நியூஸ்)