பிரதமரின் சம்பளத்தை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர் தன்னிடம் பாலியல் லஞ்சம் கோரியுள்ளதாக 'லக்மவட ஹெடக்' எனும் அமைப்பின் தலைவி மதுஷா ராமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியில் வேட்புமனுக்களைபெற்றுத் தருவதற்காக, சம்பந்தப்பட்ட நபர் அண்மையில் ஜனாதிபதியாக சர்ச்சைக்குரிய வகையில் தெரிவு செய்யப்பட்ட ஒருவரே இவ்வாறு பாலியல் லஞ்சம் கோரியதாகவும் அவர் கூறினார்.
மேலும் தான் புடவை கட்டும் போது புடவையை கழற்றச் சொன்னதாகவும் அப்போது மிக அழகாக இருக்கும் என்றும் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
முகப்புத்தக கணக்கில் காணொளி ஒன்றை வெளியிட்டு இந்த விடயம் தொடர்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)