ஜே.வி.பி.யின் தலைவர் அனுர திஸாநாயக்கவின் கார் மீது முட்டைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களால் கம்பஹாவில் இன்று (30) நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சந்தேகத்தின் பேரில் இருவர் கட்சி உறுப்பினர்களால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
அவர்களுடன் மேலும் 16 பேர் வந்ததாக சந்தேகநபர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.
அநுர திஸாநாயக்க விழா நடைபெறும் இடத்திற்குச் சென்று கொண்டிருந்த வேளையில் விழா மண்டபத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பிரபல அமைச்சர் மற்றும் பிரபல வர்த்தகர் ஒருவருக்கும் தெரிந்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, முட்டைத் தாக்குதல் தாம் வந்த வாகனத்தின் மீது அல்ல, ஏனைய வாகனங்கள் மீது தான் இடம்பெற்றதாக அனுர திஸாநாயக்க குறிப்பிட்டார். தான் ஒரு கேப் ரக வண்டி ஒன்றையே பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார். (யாழ் நியூஸ்)
අනුර කුමාරගේ මෝටර් රථයට බිත්තර ප්රහාරයක්... pic.twitter.com/2uTPvclfjf
— Ada Derana Sinhala (@adaderanasin) January 30, 2022